“விஜய்யிடம் ஆதரவு கேட்கப் போன டிடிவி தினகரன்”…. மே 8-ல் நடந்த ரகசிய சம்பவத்தை உடைத்த அமமுக…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

Spread the love

அதிமுக தலைமையை விஜயின் தவெக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள விளக்கம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும், அதை மறைக்கவே திமுக – அதிமுக இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்து வருகிறார் என்றும் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கவே விஜய்யிடம் ஆதரவு கேட்கத் திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “எங்கள் தரப்பிலிருந்து 25 எம்.எல்.ஏ-க்களை விஜய் தன் பக்கம் இழுத்ததால், பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைப்பதற்காக விஜய்யின் ஆதரவைக் கோரும் முயற்சியில் ஈடுபட்டோம். நாங்கள் திமுகவுடனோ அல்லது பாஜக பின்னணியிலோ செயல்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது” என்று அவர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஏமாற்றி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் தனது பக்கம் இழுக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். இந்த முயற்சிகள் அனைத்தும் தோலவியடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கச் சிலர் ஒப்புக்கொள்ளாததால், திருமாவளவனை முதல்வராக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடைபெற்று வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரங்களில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் தவெகவினர் திணறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மக்களிடம் எழுந்துள்ள கேள்விகளுக்கும் குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமல், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழைப் பேசி விஜய் திசைதிருப்ப முயல்வதாகவும், திருச்சி பிரசாரத்தில் கூறிய கருத்துகளுக்கு முரணாகத் தற்போது பேசி வருவதாகவும் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

Nanthini

Recent Posts

CM விஜய்யுடன் மேடையில் அமமுக MLA…. தவெகவில் ரகசிய இணைப்பு…. கலக்கத்தில் டிடிவி தினகரன்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் முன்னணி சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், தாராபுரத்தில் நடத்திய பிரச்சாரப் பொதுக்கூட்டம்…

42 seconds ago

நார்வேஜியன் 4×4 வொர்க்அவுட்…! இந்த ஒரு பயிற்சியை செய்தால் போதும்…! உங்க இதயத்தை ஸ்ட்ராங்காக வைக்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் இதோ…!

தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் இதயம் தொடர்பான கடுமையான…

45 minutes ago

சீச்சீ… என்னடா இது கொடுமை… சுவிக்கியில் ஆர்டர் செய்த முட்டைகள்… அழுகிய நிலையில் டெலிவரி… இணையத்தில் வெடித்த உணவு பாதுகாப்பு விவாதம்…!

சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…

48 minutes ago

8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!!  ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் கீழ் இயங்கும் அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள…

52 minutes ago

யோவ்… யாராவது பார்த்தா என்னடா நினைப்பாங்க… POLICE காரில் வந்து… நெடுஞ்சாலையில் செடியைத் தூக்கிய நபர்… இணையத்தில் வைரல் ஷாக்கிங் வீடியோ…!

டெல்லி-டேராடூன் அதிவேக நெடுஞ்சாலையில், உத்திரப் பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் சாலை ஓரத்தில் நட்டப்பட்டிருந்த செடியை நபர் ஒருவர் திருடிச் செல்லும்…

54 minutes ago

எத்தனை தடவை மனு கொடுக்குறது?… பஸ்ஸை நிறுத்தலனா நாங்க நகர மாட்டோம்… வீதியில் இறங்கி பஸ்களை சிறைபிடித்த மாணவர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

மேட்சல் பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பேருந்து நிறுத்தத்தில் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் சரியாக நிற்பதில்லை…

1 மணத்தியாலம் ago