காலையிலேயே பரபரப்பு… ஆண்டிப்பட்டியை தொடர்ந்து மேலும் ஒரு வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் சமீபத்தில் NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். ஜனவரி மாதத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றார். இதனிடையே இபிஎஸ் தலைமையை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். பாஜக எவ்வளவோ முயற்சி செய்தும் NDA கூட்டணியில் இணைய தினகரன் மறுத்துவிட்டார். யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே சமயம் ஆண்டிபட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன், சீட் கொடுத்தால் மட்டுமே கூட்டணி இல்லை என்றால் தனியாகத்தான் இருப்பேன் என்று டிடிவி தினகரன் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் ஆண்டிப்பட்டியை தொடர்ந்து முசிறி தொகுதிக்கும் டிடிவி தினகரன் வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளார். முசிறி தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் போட்டியிடுவார் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து வருவதால் டிடிவி தினகரன் கட்சியை தனித்து போட்டியிடப் போகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.