வெற்றிப் படங்களை தரும்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். ஆனால் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி அவர் தயாரித்த படம் தலைவர் தம்பி தலைமையில் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தியேட்டர்காரர்களுக்கும் தடபுடல் விருந்து தர ஏற்பாடுகளை செய்துள்ளார்.
நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான டிடிடி படம் பெரிய வெற்றியை பெற்றதால் தயாரிப்பாளர் சக்சஸ் மீட் நடத்தி இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஷீல்டு கொடுத்து பாராட்டி கௌரவித்தார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு படத்தின் 25வது நாளில் சென்னை கோயம்போட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பட்டு வேட்டி சட்டை பட்டு புடவை என பரிசளித்தார்.
இப்போது அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தியேட்டர் உரிமையாளர்களையும் அவர் மறக்காமல் அவர்களுக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். இப்போதும் தலைவர் தம்பி தலைமையில் படம் தமிழ்நாட்டில் 141 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வெளியான அனைத்து தியேட்டர் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு இந்த தடபுடல் விருந்து அளிக்கப்படுகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…