ரெண்டே வழி தான் இருக்கு… போர் முடிவுக்கு வரணும்னா வேற வழி இல்ல… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

ஈரான் விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தம் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று தமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஈரான் முன்வைக்கின்ற முன்மொழிவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றும், தற்போது இரண்டு சாத்தியமான வழிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று ஈரானுடன் தொடர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவது, மற்றொன்று கடுமையான ராணுவ நடவடிக்கையில் இறங்குவது என டிரம்ப் விளக்கியுள்ளார்.

இருப்பினும், தாம் மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகுவதாக டிரம்ப் கூறியுள்ளார். ராணுவ நடவடிக்கையைத் தவிர்த்து, ராஜதந்திர ரீதியாகப் பேசிப் பிரச்சனையைத் தீர்க்கவே தாம் விரும்புவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். “மனிதாபிமான அடிப்படையில்தான் யோசிக்கிறேன்” என்று கூறியுள்ள அவரது இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.