“காலம் கடந்துவிட்டது இனி முடியாது” ஈரானுடன் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் போரிடத் தயார்… டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை..!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் தலைமை முற்றிலும் சிதைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் வான் பாதுகாப்புப் படை (Air Defence), விமானப்படை (Air Force) மற்றும் கடற்படை (Navy) ஆகியவை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டுத் தலைமை இப்போது பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு “காலம் கடந்துவிட்டது” (Too Late) என அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கடந்த சில நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் அணுசக்தித் திட்டங்களைத் தடுப்பதையும், பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் குறைப்பதையுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கமாக டிரம்ப் முன்னிறுத்துகிறார். ஈரானிடம் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகவும், அவர்கள் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், அதை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரானுடனான இந்தப் போர் இன்னும் நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் கணித்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய தலைமை குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. அமெரிக்கா எப்போதும் அமைதியை விரும்புவதாகவும், ஆனால் ஈரானின் பிடிவாதமான போக்கால் தற்போது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Soundarya

Recent Posts

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

10 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

29 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

35 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

47 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

58 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

1 மணத்தியாலம் ago