ஈரானுக்கு நிதி மற்றும் ராணுவத் தளவாட உதவிகளை வழங்கும் நாடுகள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் அதிரடியாக எச்சரித்துள்ளார். ஈரானுக்குத் தாம் வழங்கிய ஒப்பந்தத்தை விடச் சிறந்த ஒன்றை யாராலும் தர முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதனை ஏற்றுக்கொள்ள ஈரான் மறுத்துவிட்டதால் அந்நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருளாதாரப் போரைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நேச நாடுகள் அனைவரும் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள டிரம்ப், இதன் மூலம் உலகளவில் ஈரானின் அனைத்துப் பேராபத்தான திட்டங்களும் முற்றிலும் முடக்கப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
