“வாய்ப்பு இல்ல ராஜா”…. டிரம்ப் செய்த அந்த ஒரு வேலை…. மீண்டும் வெடிக்கும் உலகப்போர்?… ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய சம்பவம்…!

Spread the love

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தம், இறுதிக்கட்டத்தை எட்டிய வேளையில் டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவு ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்ற காரணத்தைக் கூறி, இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடுமையான போர்ச் சூழல் நிலவியது. ஆரம்பத்தில் உலக நாடுகள் இதனை வேடிக்கை பார்த்தாலும், இந்த போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, பொருளாதார நெருக்கடியை உணர்ந்த உலக நாடுகள் ஒன்றிணைந்து, போரை நிறுத்தும்படி அமெரிக்காவிற்கு கடுமையான ராஜதந்திர நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கின.

உலக நாடுகளின் தொடர் அழுத்தத்தின் காரணமாக, ஒருவழியாக டிரம்ப் சமாதானத்திற்கு இறங்கி வந்து, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையை எட்டியது. இந்த ஒப்பந்தத்திற்காக ஈரான் தரப்பில் மிகவும் எளிமையான மற்றும் நியாயமான கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தங்களின் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் மற்றும் ஈரான் கடல் பகுதியில் எல்லையோர அச்சுறுத்தலாக நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க போர்க்கப்பல்கள் வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கை. இந்த நிபந்தனைகளுக்கு ஆரம்பத்தில் ஒப்புக்கொள்வது போலத் தலை அசைத்த அமெரிக்கா, தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பல்டி அடித்துள்ளது.

சமீபத்தில் NBC நியூஸ் ஊடகத்தின் ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஈரான் மீதான தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும், பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்து இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே பரிசீலிக்கப்படும் என்று கறாராகக் கூறிவிட்டார். “எல்லாம் ஒப்பந்தத்திற்குப் பிறகுதான்; அவர்கள் ஒழுங்காக நடந்து கொண்டு, நல்ல முறையில் செயல்பட்டால் மட்டுமே நாங்கள் அதுகுறித்து பேசுவோம்” என்ற டிரம்பின் இந்த ஆதிக்கத் தொனியிலான பேச்சு, சுமுகமாக முடிய வேண்டிய அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, ஈரான் தரப்பை உச்சக்கட்ட கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

முதலில் நிதியை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, இப்போது பேச்சுவார்த்தையின் இறுதி நேரத்தில் வார்த்தையை மாற்றினால் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. “வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையைப் போட்டு உடைத்த கதையாக” மாறியுள்ள டிரம்பின் இந்த செயலால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. இந்த மோதல் மீண்டும் வெடித்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் என்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எகிறும் அபாயமும், சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு கூடுதல் நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழலும் உருவாகுமோ என்ற அச்சம் இந்தியப் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago