இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்ட செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, நெதன்யாகுவை நோக்கி “பைத்தியகாரத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்” என டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், “நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் இந்நேரம் ஜெயிலுக்குச் சென்றிருப்பீர்கள்” என்று டிரம்ப் மிகவும் காரசாரமாகக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து பேசிய டிரம்ப், இஸ்ரேல் நாட்டுக்கே உலக அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக நெதன்யாகுவின் செயல்பாடுகள் இருப்பதாகவும், இதனால் ஒட்டுமொத்த உலகமே அவரை வெறுப்பதாகவும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். நெதன்யாகுவின் தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ நகர்வுகளுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள அதிருப்தியை இந்தத் தொலைபேசி உரையாடல் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. பாரம்பரிய நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கிடையேயான இந்த மோதல் போக்கு உலக அரசியலில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…