இந்தியாவை “நரகக்குழி” என விமர்சித்துவிட்டு… அடுத்த நிமிடம் “BEST FRIEND”… அந்தர் பல்டி அடித்த டிரம்ப்… என்ன காரணம் தெரியுமா..??

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

இந்தியாவையும் சீனாவையும் “நரகக் குழிகள்” (Hell-holes) என்று விமர்சித்தப் பதிவை டிரம்ப் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் இந்தியாவைப் புகழ்ந்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக வெளியான செய்தியின்படி, டிரம்ப் இந்தியாவை ஒரு “சிறந்த நாடு” என்றும், அங்குத் தனக்கு ஒரு “மிகச்சிறந்த நண்பர்” (பிரதமர் மோடி) தலைமையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது முந்தைய சர்ச்சை பதிவால் ஏற்பட்ட அதிருப்தியைத் தணிக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்காவின் பிறப்புரிமைக் குடியுரிமைச் சட்டத்தை விமர்சித்த மைக்கேல் சாவேஜின் பதிவை டிரம்ப் பகிர்ந்திருந்தார். அதில் இந்தியர்களை “மடிக்கணினியுடன் கூடிய குண்டர்கள்” என்றும், அவர்கள் அமெரிக்கக் குடியுரிமைக்காகவே இங்கு வந்து குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும் மிகக் கடுமையான இனவெறி கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “நாங்கள் சில அறிக்கைகளைப் பார்த்தோம்” என்று மிகச் சுருக்கமான, ஆனால் அழுத்தமான பதிலை அளித்திருந்தது.

   

இந்தச் சூழலில், அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் எல்ம்ஸ், டிரம்ப்பின் தற்போதைய கருத்தைப் பகிர்ந்துள்ளார். “இந்தியா ஒரு மகத்தான நாடு; அதன் தலைமையில் எனக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறார்” என்று டிரம்ப் கூறியதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அரசியல் சூழலில், குறிப்பாக ஈரான் மற்றும் சீனா உடனான பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் நட்புறவு அமெரிக்காவிற்கு மிகவும் அவசியம் என்பதால், டிரம்ப் தனது நிலைப்பாட்டைச் சரிசெய்துகொள்ள விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.