ஈரான் தலையை வெட்டியாச்சு.. “பயந்தது போதும்.. போர்கப்பல்களை கிளப்புங்க” ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகீர் அழைப்பு..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு “கடலுக்குள் சமாதிதான்” என ஈரான் எச்சரித்திருந்தது. இதனால் ஏற்பட்டுள்ள செயற்கையான தடையை உடைக்க, பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் இணைந்து தங்கள் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இருப்பினும் ஒரு தோற்கடிக்கப்பட்ட தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். ஈரான் மிகவும் பலவீனமடைந்திருந்தாலும், ஒன்றிரண்டு டிரோன்களை (Drones) அனுப்புவதோ அல்லது கண்ணிவெடிகளைப் பதிப்பதோ அவர்களுக்கு எளிதான காரியம் என்று அவர் எச்சரித்துள்ளார். எனவே, இந்த நீர் வழிப்பாதையைத் திறந்து பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் சென்று வர சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

   

குறிப்பாக, ஈரானின் இந்தத் தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் உடனடியாகத் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். முற்றிலும் தலை துண்டிக்கப்பட்ட ஒரு நாடாக ஈரான் மாறியுள்ள போதிலும், அதன் சிறிய அச்சுறுத்தல்களையும் முறியடித்து உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் தற்போதைய திட்டமாகும். டிரம்பின் இந்த அழைப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.