கோழைகளே..! நீங்கள் வெறும் காகிதப்புலி… “இதை மறக்கவே மாட்டோம்” நேட்டோ நாடுகளை விளாசிய டிரம்ப்.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போரில் தங்களுக்கு ஆதரவு அளிக்காத நேட்டோ (NATO) நாடுகளைக் “கோழைகள்” என்று கடுமையாகச் சாடியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை (Strait of Hormuz) மூடியுள்ள நிலையில், அந்தப் பாதையை மீண்டும் திறப்பதற்கான ராணுவ நடவடிக்கைகளில் நேட்டோ நாடுகள் இணையவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறிய டிரம்ப், எண்ணெய் விலை குறித்து நேட்டோ நாடுகள் குறை கூறுகின்றனவே தவிர, நீர்ச்சந்தியைத் திறக்க உதவ முன்வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த நீர்ச்சந்தியைத் திறப்பது ஒரு எளிய ராணுவ நடவடிக்கை என்றும், நேட்டோ நாடுகள் இதில் ஈடுபடாமல் இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

மேலும், அமெரிக்காவின் ராணுவ பலம் இல்லாவிட்டால் நேட்டோ என்பது வெறும் “காகிதப்புலி” (Paper Tiger) மட்டுமே என்றும் டிரம்ப் எள்ளி நகையாடியுள்ளார். “நாங்கள் இவ்வளவு உதவி செய்தும், நேட்டோ நாடுகள் ஒரு முக்கியமான கட்டத்தில் உதவவில்லை; இதை நாங்கள் நினைவில் வைத்திருப்போம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.