அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு திடீரென வரிகளை அறிவித்து உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா மீது 25% வரியை அறிவித்த அவர் வர்த்தக தடைகளை நீக்க இந்த வரி விதிக்கப்படுவதாக கூறினார். இது தவிர ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வாங்குவதால் அபராதமும் விதிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த புதிய உத்தரவின் கீழ் அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் வரிவிதிப்பதை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறது. அதாவது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது.
மொத்தம் 70 நாடுகளுக்கான பரஸ்பர வரிவிதிப்பு மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதில் இந்திய பொருள்களுக்கு அதே 25% வரிவிதிப்பு நீடிக்கும் நிலையில், மற்ற நாடுகளுக்கு மட்டும் 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சிரியாவிற்கு 41% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பிரேசில், UK நாடுகளுக்கு 10% வரிவிதிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர வரிவிதிப்பு மசோதாவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்ட நிலையில், அடுத்த ஏழு நாள்களில் இந்த புதிய வரி நடைமுறைக்கு வர உள்ளது.
