பக்தியில் திளைக்கும் மக்கள்..! தெய்வீகமா..? நோயின் அறிகுறியா..? அனுமன் சிலையைச் சுற்றி வரும் நாயின் உண்மை பின்னணி…!!

By Soundarya on தை 19, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நாய் ஒன்று பஜ்ரங்க்பலி (அனுமன்) சிலையைச் சுற்றி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த நாயை ஒரு தெய்வீகச் செயலாகக் கருதி வழிபடத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த விசித்திரமான செயலுக்குப் பின்னால் ஒரு தீவிரமான மருத்துவக் காரணம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உண்மையில், அந்த நாய் ‘நரம்பியல் கோளாறு’ (Neurological Disorder) எனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், நாய்கள் தங்களின் மன சமநிலையை இழந்து, ஏதேனும் ஒரு பொருளையோ அல்லது வெற்று இடத்தையோ தொடர்ந்து வட்டமடிக்கத் தொடங்கும். எனவே, அந்த நாயைக் கடவுளின் தூதராகக் கருதுவதை விடுத்து, அதற்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.