விஜய் டிவியை ஓடவிட்ட சன் டிவி… டாப் 10 சீரியல்களின் TRP-ரேட்டிங்க் லிஸ்ட் இதோ..!

By Soundarya on கார்த்திகை 22, 2024

Spread the love

பொதுவாக சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி மற்றும் ஜீ தமில் சேனல்கள் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாக்கப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாட்களுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது .சீரியலுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதனுடைய டிஆர்பி ரேட்டிங் இருக்கும். அந்த வகையில் இந்த வருடத்தின்  டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கயல்.. கயலை தீர்த்துக்கட்ட போகும் கவுதம்.. யார்  காப்பாற்றுவார்? பரபரப்பான கயல் ப்ரோமோ

   

கயல்: முதல் இரண்டு இடங்களை வழக்கம் போல மூன்று முடிச்சு மற்றும் கயல் சீரியல்கள் தக்க வைத்துள்ளது. கயல் சீரியல் 10.33 புள்ளிகள் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

   

மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி? -  தமிழ் News - IndiaGlitz.com

 

மூன்று முடிச்சி: இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் 9.74 புள்ளிகளுடன் உள்ளது.

Watch Marumagal Family Drama Show Online | Sun NXT

 மருமகள்: கடந்த வாரம் ஐந்தாவது இடத்திலிருந்து மருமகள் சீரியல் இந்த வாரம் 9.17 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

singapenne Serial Time Changed : டிஆர்பி-யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும்  சிங்கப்பெண்ணே சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி

சிங்கப்பெண்ணே; கடந்த வாரம்  மூன்றாவது இடத்தில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகிய சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின் தள்ளப்பட்டு 9.5 டிஆர்பி புள்ளிகளோடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Sundari Serial Actress gabriella sellus announced her Pregnancy : சுந்தரி  சீரியல் முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன கேப்ரியல்லா! குவியும் வாழ்த்துக்கள்

சுந்தரி: அடுத்ததாக கேப்ரியல்லா செல்லஸ் நடித்த சுந்தரி சீரியல்-2 8.63 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.

How (and why) Ramanand Sagar's Ramayana TV serial brought much of India to  a standstill in the 80s

ராமாயணம்: சன் டிவியில் ராமாயணம் தொடர் கடந்த வாரத்தை போல இந்த வாரமும் 7.94 புள்ளிகளோடு ஆறாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

Siragadikka Aasai | 26th to 30th June 2023 - Promo - YouTube

சிறகடிக்க ஆசை: விஜய் டிவியில் சக்கை போடு போட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டில் ஏழாவது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது.

Watch Ranjani Family Drama Show Online | Sun NXT

ரஞ்சினி: சன் டிவியின் ரஞ்சினி சீரியல் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு 6.3 டிஆர்பி புள்ளிகளோடு எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நடிகை; இனி  அவருக்கு பதில் இவர்

கார்த்திகை தீபம்: அதேபோல கடந்த வாரம் ஒன்பதாவது இடத்திலிருந்து கார்த்திகை தீபம் சீரியல் தற்போது புது கதை களத்தோடு ஒளிபரப்பாகி வருவது . இதனால் இந்த வாரமும் 6.21 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தில் உள்ளது.

Pandian Stores 2 - Disney+ Hotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்து சந்தியா ராகம் சீரியலை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் 5.84 டிஆர்பி புள்ளிகளோடு பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.