“சீட் கிடையாது”.. விஜய் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. அதிர்ச்சியில் உறைந்த தவெக நிர்வாகிகள்…. இடைத்தேர்தல் ரேஸில் ட்விஸ்ட்…!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக கட்சியில், தங்களின் MLA பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இணைந்த 4 முக்கிய நிர்வாகிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான விஜய் அவர்கள் தயங்குவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலில் இவர்களுக்கு சீட் வழங்கினால் தேவையில்லாத அரசியல் விமர்சனங்களும், கட்சிக்குள் சலசலப்புகளும் ஏற்படலாம் என்பதால் தலைமை இந்த அதிரடி முடிவை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கட்சித் தாவிய தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பி வந்த அந்த நால்வருக்கும் ஏமாற்றம் அளிக்காத வகையில், அவர்களுக்கு வாரியத் தலைவர் போன்ற உயரிய அரசுப் பதவிகளை வழங்க கட்சித் தலைமை மாற்று யோசனைகளை முன்வைத்துள்ளதாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களின் தற்போதைய அதிகாரமிக்க MLA பதவிகளையே தூக்கி எறிந்துவிட்டு வந்த தங்களுக்கு, இந்த வாரியப் பதவிகள் ஈடாகுமா என்றும், இதனை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்பார்களா என்பதும் தற்போதைக்கு பெரும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.