காலையிலேயே ஷாக்…. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்….. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் வேளையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த விலையில் வழங்கப்படும் பாமாயில் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. பாமாயில் கொள்முதலில் முறையேடு நடந்ததாகக் கூறப்படும் டெண்டர் புகார்கள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவால் கொள்முதல் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்குத் தேவையான அவசியப் பொருட்களைத் தங்குதடையின்றி வழங்குவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு நீதிமன்றம் அரசுக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பித்தாலும் கூட, ஒரு வாரத்திற்குள்ளாகவே பாமாயிலை முழுமையாகக் கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்வது அரசுக்குக் மிகப்பெரிய சவாலாகவும் நெருக்கடியாகவும் மாறும். எனவே, பண்டிகைக் காலத்தில் பாமாயில் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.