சாலையே போடாம பல ஆயிரம் கோடியா?… அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிக்கல்?… லஞ்ச ஒழிப்புத்துறையில் குவிந்த பல ஆயிரம் கோடி கருப்பு பண புகார்!”

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையில் அதிர்ச்சிகரமான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மூன்று பினாமி நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சாலைகளையே அமைக்காமல், அமைத்தது போல் போலி கணக்கு காட்டி பல கோடி ரூபாய் அரசுப் பணம் சுருட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, எ.வ.வேலுவின் உதவியாளரான கஜேந்திரனின் மகன் பெயரில் இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்த முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் E.K.K., அப்பு மற்றும் பாபுஜி ஆகிய கட்டுமான நிறுவனங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.