நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர், அய்யனார் மற்றும் பூர்ணகலா, புஷ்கலா உருவங்கள் பொறிக்கப்பட்ட சுமார் 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சங்கிலியை கடந்த மே மாதம் காணிக்கையாக வழங்கினார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆடி அமாவாசை விழாவின்போது செந்தில் என்ற கோயில் பூசாரி, பக்தர் அளித்த அந்த காணிக்கை நகையைத் தனது கழுத்தில் பந்தாவாக அணிந்துகொண்டு பிரசாதம் வழங்கிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.
இந்த வீடியோவைக் கண்ட பக்தர் தாமோதரன் அதிர்ச்சியடைந்து அளித்த புகாரின் பேரில், கோயில் செயல் அலுவலர் இளங்குமரன் நேரடி விசாரணை நடத்தினார். அதில், சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த சங்கிலி லேசாக சேதமடைந்ததாகவும், அதனைச் சரிசெய்வதற்காகப் பிச்சையா என்ற மற்றொரு பூசாரி, நிர்வாகத்தின் முறையான அனுமதியின்றி செந்திலிடம் கொடுத்ததும் அம்பலமானது. பக்தர் மனமுவந்து அளித்த காணிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியது விசாரணையில் உறுதியானதை அடுத்து, அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினியின் உத்தரவின்படி பூசாரி செந்திலை தற்காலிகப் பணிநீக்கம் செய்து கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையே, பூசாரி கழுத்தில் அணிந்திருந்தது 200 கிராம் எடையுள்ள தங்க நகை என்று இணையத்தில் சிலர் தவறான வதந்திகளைப் பரப்பினர். ஆனால், அது தங்கம் அல்ல, வெறும் 25 ஆயிரம் மதிப்பிலான நகைதான் என செயல் அலுவலர் இளங்குமரன் திட்டவட்டமாக விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறைவனின் புனிதத்தைப் பேண வேண்டியவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என கொந்தளித்துள்ள பக்தர்கள், விதிகளை மீறி நகையை கைமாற்றிய பூசாரி பிச்சையா மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…