“எல்லாமே என்னுடையது தான்” காதலர் தினத்தில் நடிகை திரிஷா போட்ட பதிவு… ரசிகர்கள் ஷாக்…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

காதலர் தினமான இன்று (பிப். 14), நடிகை திரிஷா தனது செல்லப் பிராணிகளுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தான் வளர்க்கும் அனைத்து நாய் குட்டிகளின் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய அவர், “எல்லாமே என்னுடையது தான்” (All Mine) எனக் குறிப்பிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்ட திரிஷா, இந்த நாளை தனது செல்லப் பிராணிகளுடன் கொண்டாடுவதைக் கண்டு ரசிகர்கள் ‘லைக்குகளை’ குவித்து வருகின்றனர்.

திரிஷாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் அவர் குறித்து அரசியல் வட்டாரத்தில் எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இது அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். எந்தவித வதந்திகளுக்கும் இடம் கொடுக்காமல், தனது செல்லப் பிராணிகளே தனது உலகம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் திரிஷாவின் இந்த ‘காதலர் தின’ வாழ்த்து அமைந்துள்ளது.