, “தாலி கட்டுவது உறுதி.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்” விஜயுடன் திருமணம்..? திரிஷாவின் தாயார் கொடுத்த ரியாக்‌ஷன்..!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலானது. அந்த வீடியோவைப் பகிர்ந்த பயனர் ஒருவர், “தாலி கட்டுவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாகக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு விஜய் – த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தப் சர்ச்சைக்குரிய பதிவிற்கு த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் ‘லைக்’ செய்துள்ளதாக ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவியது. இதனால், த்ரிஷாவின் தாயார் இந்தத் திருமணச் செய்தியை மறைமுகமாக உறுதிப்படுத்திவிட்டதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர். இது விஜய் மற்றும் த்ரிஷாவின் திருமணக் கிசுகிசுக்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது.

   

இருப்பினும், அந்தப் பதிவின் ‘லைக்’ செய்தவர்கள் பட்டியலில் த்ரிஷாவின் தாயார் பெயர் தற்போது இடம்பெறவில்லை. இதனால் அந்த ஸ்கிரீன்ஷாட் உண்மையானதா? அல்லது யாராவது எடிட் செய்து வதந்தியைப் பரப்பினார்களா ? என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வராத நிலையில், இது வெறும் சமூக வலைத்தள வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.