இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவான படம் தி ரோடு. இந்த படத்தில் திரிஷா, மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மதுரையில் கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி பட பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள த்ரிஷா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தி ரோடு திரைப்படம் வெளியாகும் போது நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் படப்பிடிப்பு காரணமாக அங்கு இருக்க முடியவில்லை. உங்களது அன்பை இங்கு வரை நான் உணர்கிறேன். படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் எனது நன்றி. தொடர்ந்து உங்களது அன்பை எனக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள். எல்லாரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
