இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா… யாருடன் தெரியுமா?…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவர் திரையுலகிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து விட்டு, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில்  குந்தவையாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

   

தற்போது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி  பிசியாக நடித்துக் கொண்டுள்ளார். அந்தவகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ ‘ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை திரிஷா. ‘கில்லி’ திரைப்படத்தை தொடர்ந்து, இவர்களின் கூட்டணி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின்  இளம் இயக்குநராக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது  37வது பிறந்தநாளை காஷ்மீரில் கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வருவதால் அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் லோகேஷ் மற்றும் சஞ்சய் தத்துடன் நிற்கும் புகைப்படங்களை பதிவு செய்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்…