சில நடிகர், நடிகையர் ஜோடியாக நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும். எம்ஜிஆர் – சரோஜா தேவி, சிவாஜி – கேஆர் விஜயா, ரஜினி – அம்பிகா, கமல் – ஸ்ரீதேவி, விஜய் – ஜோதிகா அஜீத் – திரிஷா என இப்படி ஒரு பொருத்தமான கெமிஸ்டரி ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகும்.
அந்த வகையில் அஜீத்குமாருடன் கிரீடம், ஜி, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் திரிஷா. பொன்னியின் செல்வன், லியோ படங்களை தொடர்ந்து இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 4ம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்னும் படத்தின் பெரும்பகுதிகள் ஷூட் செய்யப்பட வேண்டிய நிலையில், அனைத்தும் பெண்டிங்கில் உள்ளது. இந்த படத்தில் அஜீத்குமார் ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.
அவர் நடிக்க வேண்டிய காட்சிகளும் இன்னும் நிறைய உள்ளது. அஜர்பைஜானில் ஏற்பட்ட மணல் புயல், பனிப்பொழிவு, குளிர், சூறாவளி போன்ற காரணங்களால் படப்பிடிப்பு அடிக்கடி ரத்து செய்யப்பட்டதால், திட்டமிட்டபடி படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடியவில்லை.
இதற்கிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் பிரபல இயக்குநர்களின் 2 படங்கள் மற்றும் தமிழில் மணிரத்னம் தக்லைப் என அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் திரிஷா. ஏற்கனவே விடாமுயற்சிக்கான கால்ஷீட் தேதி கொடுத்த நிலையில்,
அந்த நாட்களில் ஷூட்டிங் நடக்காததால் மீண்டும் மீண்டும் தேதி தர வேண்டிய நிலையில், மற்ற படங்களுக்கு தந்த கால்ஷீட் தேதியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதனால் மற்ற படங்களில் நடிப்பதும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அஜீத்குமாருடன் நடிக்க ஆசைப்பட்டு இப்படி ஒரு வம்பில் மாட்டிக் கொண்டோமே என பயங்கர டென்சனில் காணப்படுகிறார் நடிகை திரிஷா.