தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இயக்குனர் அவர்கள் தற்போது சில தினங்களுக்கு முன்னால் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று தகவல் தெரிவித்து இருந்தார். அந்த நிலையில் முதல் சிங்கிள் காண அப்டேட் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படத்தில் முதல் சிங்கிள் பாடலை விஜய் அவர்களே பாடியுள்ளாராம். இதில் இவன் இரண்டாவதாக குத்துப்பாட்டு ஒன்று தயார் செய்துள்ளாராம், அப்பாடலில் பிரபல நடிகையான திரிஷா தான் நடனமாட உள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.
சமீபத்தில் ஜவான் படத்தில் அட்லீ அவர்கள் ஷாருக்கானுடன் ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் என்று கேட்டபோது கூட முடியாது என்று ஷாருக்கான் படத்தையே மறுத்தலித்து விட்டார். திரிஷா இதுவரையிலும் எந்த ஐட்டம் பாடல்களுக்கும் ஆடமாட்டேன் என்று கொள்கையாகவே வைத்திருந்தார், ஆனால் விஜயின் மேல் இருக்கும் அன்பாலும் வெங்கட் பிரபு யுவன் சங்கர் ராஜா இவர்களின் அழைப்புக்காகவும் மட்டுமே திருஷா இப்படத்தில் விஜயுடன் இணைந்து ஐட்டம் பாடலுக்கு ஆட தயாராகி உள்ளாராம்.
இப்பாடலுக்கான டான்ஸ் மாஸ்டர் பிரபல தெலுங்கு படமான குண்டூர் காரன் என்ற மகேஷ் பாபு படத்தில் வந்த “கர்ச்சி மடத்தபட்டி” என்ற பாடலுக்கு நடன ஆசிரியராக இருந்த “சேகர்” அவர்கள் தான் இந்த ஐட்டம் பாடலுக்கு நடன பயிற்சி அளிக்க உள்ளாராம். இதுவரையில் இல்லாத புது காம்போவாக இருப்பதால் ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.