நேரு ஸ்டேடியமே அதிருது… விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா… வெளியான தகவல்…!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க விஜய்யின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலகில் அவருக்குப் பக்கபலமாக இருந்த முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நெருங்கிய தோழியான நடிகை த்ரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் நேரில் வந்து வாழ்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களின் அபிமான நடிகரின் அரசியல் பயணத்தைக் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தில் குவிந்து வருவதால், எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் 5,000 போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடிகராகக் கோலோச்சிய விஜய், தற்போது மக்கள் தலைவராகப் பொறுப்பேற்கும் இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.