Categories: சினிமா

திரிஷா முதல் விஷ்ணு விஷால் வரை.. நடிகை வரலட்சுமியின் சங்கீத் ஃபங்ஷனில் கலந்து கொண்ட பிரபலங்கள்..!

Spread the love

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவருக்கும் அவரின் மூத்த மனைவி சாயா சிங்குக்கும் பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதை தொடர்ந்து தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

 

தாரதப்பட்டை, விக்ரம் வேதா, சர்தார், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார். தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் கடைசியாக வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

இவர் தனது நீண்ட நாள் காதலரான நிக்கோலய் சச்சுதேவ் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவரின் நிச்சயதார்த்தம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்ற முடிந்தது. இந்நிலையில் இன்று தாய்லாந்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக வரலட்சுமி திருமண கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது.

ஹல்தி மற்றும் சங்கீத் உள்ளிட்ட பங்க்ஷன்கள் நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. நேற்று மெஹந்தி புகைப்படங்கள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து சங்கீத் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இவரின் சங்கீத் பங்க்ஷனில் நடிகை திரிஷா கலந்து கொண்டிருக்கின்றார். அதைத்தொடர்ந்து விஜயகுமாரின் மகள் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் இந்த சங்கீத் ஃபங்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நடிகை திரிஷா வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரின் திருமண புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

3 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

25 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

29 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

30 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

34 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

36 minutes ago