“நீ என்னை ஏமாத்துற”…. பெண்ணின் பிறப்புறுப்பில் சானிடைசர் ஊற்றி கொடூரம்… லிவ்-இன் துணையால் சீரழிந்த மாணவியின் வாழ்க்கை..!

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் 19 வயது இளம் பெண் தனது லிவ்-இன் துணையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், குருகிராமில் உள்ள ஜிடி கோயங்கா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பயின்று வருகிறார். டெல்லியைச் சேர்ந்த சிவம் (19) என்ற இளைஞருடன் கடந்த சில மாதங்களாக குருகிராம் செக்டார் 69-ல் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கி வந்துள்ளார். இவர்களது திருமணம் குறித்து இரு குடும்பத்தாருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவம், அந்தப் பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் பிறப்புறுப்பில் காதலன் சானிடைசரை ஊற்றி கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாணவி மயக்கமடைந்து உயிருக்குப் போராடியுள்ளார். பெண்ணின் தாயாரிடம் இருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டனர். தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாட்ஷாபூர் காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சிவத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி தன்னை ஏமாற்றுவதாகச் சந்தேகித்ததால் ஆத்திரத்தில் அவரைத் தாக்கியதாக சிவம் ஒப்புக்கொண்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களைச் சேகரித்துள்ள போலீஸார், சிவத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பான நகரம் என்று கருதப்படும் குருகிராமில் கல்வி பயில வந்த மாணவிக்கு நேர்ந்த இந்த கதி அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

6 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

7 மணத்தியாலங்கள் ago