தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனது கட்சியின் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ள அவர், இந்த முக்கிய அறிவிப்பையும் அங்கேயே வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. புவியியல் ரீதியாக மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சியை நிர்வாகத் தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் பல முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களை இணைக்கும் பாலமாக விளங்கும் திருச்சியை தலைநகராக்குவது நீண்ட கால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
இருப்பினும், தலைநகர் மாற்றத்திற்கு பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதிகள், கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பல நிர்வாகச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கனவே சென்னை பெருநகரம் மாநிலத்தின் முக்கிய மையமாக இயங்கி வரும் நிலையில், மற்றொரு தலைநகரை உருவாக்குவது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. எனினும், அரசியல் கட்சிகளுக்கு திருப்புமுனையைத் தரும் என்று நம்பப்படும் திருச்சியில் முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி முடிவை எடுப்பாரா அல்லது அறிவிப்போடு நின்றுவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
