அப்பன் மகனுக்குச் சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா..? பஸ் ஸ்டாப்பில் எம்பி படம் எதற்கு..? கே.என்.நேருவை வறுத்தெடுத்த திருச்சி சூர்யா…!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர் பேருந்து நிறுத்தத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ₹10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நிழற்குடையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி மேயர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிழற்குடையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேருவின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “அப்பன் மகனுக்குச் சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா?” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

   

மேலும், திருச்சியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு பெரம்பலூர் எம்பியின் புகைப்படம் எதற்கு என்றும், கோடீஸ்வரர் பட்டியலில் இருக்கும் கே.என்.நேரு தனது மகனை விளம்பரப்படுத்த மக்கள் வரிப்பணத்தையும் சட்டமன்ற வளர்ச்சி நிதியையும் பயன்படுத்துவதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சம்பந்தமே இல்லாத ஒருவரின் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதை திருச்சி மாநகராட்சி வேடிக்கை பார்ப்பதாகக் கூறியுள்ள அவர், இதுகுறித்து முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்றும் பதிவிட்டுள்ளார்.