அரசு தொடக்கப் பள்ளிகளில் 1768 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்.. அறிவிப்பில் TET குறித்து இடம்பெற்ற முக்கிய தகவல்

By John

Updated on:

TRB

வருடந்தோறும் பி.எட், ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அவர்களுக்கேற்ற அரசு வேலை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. பி.எட்., படித்த நிறைய ஆசிரியர்கள் இன்று தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு தொடக்கப்பள்ளிகள், ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைப் பற்றிய கூடுதல் விபரங்களைப் பார்ப்போம்.

   

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தொடக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சமூக பாதுகாப்புத்துறையில் கீழ் செயல்படும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB
Teachers Recruitment Board

மொத்தம் உள்ள 1768 காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகிற மார்ச் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதியானது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனம் / மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ( DIET) தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது 12ம் வகுப்புத் தேர்ச்சியுடன் 4 வருட இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வேயின் மெகா வேலை வாய்ப்பு.. 10-வது பாஸ் ஆனா போதும்..

மேலும் முக்கியமாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்ற கன்டிஷனும் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் பயின்ற ஆசிரியர் பட்டயப்படிப்பு (D.T.Ed.,) தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வின் மூலம் நியமிக்கப்படும் இந்த ஆசிரியர் பணிக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வானது ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

School
tamil nadu schools 1200 1648618312

உச்சபட்ச வயது வரம்பு : இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது உள்ளவர்கள் பொது பிரிவிற்கும், இட ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளவர்கள் 2024 ஜூலை மாதம் 58 வயது முடிய உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் தமிழ்நாட்டில் அனைவரும் தமிழ் மொழி தேர்வில் தகுதி பெற வேண்டும். முக்கியமாகத் தமிழ் தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்ததாள் திருத்தப்படும்.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வழியாகப் பூர்த்திசெய்ய வேண்டும் . தேர்வு கட்டணமாக பொது மற்றும் பிற பிரிவினர் 600 ரூபாயும், எஸ்சி எஸ் ஏ எஸ் டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணமாக 300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

TET
tet exam

150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்படும். போட்டி எழுத்துத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.