தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 17 இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.trb.tn.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்ற விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகுதி, வயது மற்றும் பாடவாரியான விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவம்பர் 10 ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
