“ஏய், இங்க வாங்கடி ஒருத்தன் சிக்கிட்டான்”… படுத்திருந்த VAO தலையில் கல்லை போட்டு கொலை… பணத்திற்காக திருநங்கைகள் செய்த கொடூர சம்பவம்…!

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் கிராம நிர்வாக அலுவலரான ராஜா ராமன் (40) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த 2024ஆம் ஆண்டு எட்டுக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சமயத்தில் பட்டா மாற்றத்திற்காக வந்த பகுதி மக்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் அளித்த புகாரி அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த ராஜா ராமன் நேற்று முன்தினம் அந்த வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்று வந்த நிலையில் அவரை வழிமறித்த மர்ம நபர்கள் தலை, கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ராஜா ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இரவு நேரத்தில் ராஜா ராமன் அந்த பகுதியில் போதையில் படுத்து இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த செல்லுரை சேர்ந்த நிவேதா மற்றும் ஸ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவருடைய முகத்தில் கருங்களை தூக்கிப்போட்டு கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் மோதிரம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் கொடுத்த ‘Shocking’ என்ட்ரி… மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக – 2011 வரலாறு மீண்டும் ரிப்பீட்…. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்குமா திமுக?…..!

தேர்தல் களத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக போன்ற ஒரு பேரியக்கம், விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே…

6 minutes ago

“ஜஸ்ட் 1 ரூபாய் இருந்தா போதும்!… 1989-ல் ஒரு கிலோ உருளைக்கிழங்கு… 35 வருஷத்துக்கு முன்னாடி ஒரு மாச பட்ஜெட் இவ்வளவுதானா?… வைரலாகும் பழைய நாட்குறிப்பு…!!!

கடந்த காலத்தின் நினைவுகள் எப்போதும் ஒருவிதமான ஏக்கம் கலந்த இனிமையை நமக்குத் தருகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும்…

9 minutes ago

ஜெயலலிதாவால் முடியாதது.. திமுக ‘வாஷ் அவுட்’…. 50 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை ஒரே நாளில் தரைமட்டமாக்கிய விஜய்… இனி தமிழ்நாட்டின் முதல்வர் இவர்தானா..?

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சி இன்று அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தி.மு.க-வின்…

10 minutes ago

“வரலாறு காணாத சாதனை… இரண்டே ஆண்டில் அரியணை”… கோட்டையை நோக்கி விஜய்… தமிழகமே அதிரும் தேர்தல் முடிவுகள்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக்…

15 minutes ago

டோட்டலா சீன் மாறுதே… விஜய்யுடன் கைகோர்க்கும் 3 முக்கிய கட்சிகள்?… கசிந்த ரகசியத் தகவல்…!

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்ற வசனத்திற்கு முற்றிலும் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்…

20 minutes ago

“சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்… என் புள்ளைங்க பசியில செத்துடுவாங்க!”… அதிகாரிகளின் காலில் விழுந்து கதறும் தாய்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச்…

22 minutes ago