மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் – தென்னக ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

By Elango on மார்கழி 11, 2025

Spread the love

தென்னக ரயில்வே துறைக்கு உட்பட்ட சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் இப்போது நடந்து வருகிறது. இதற்காக தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. இதற்கிடையே கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ( 20636) வருகிற 15ம் தேதி முதல் வருகிற பிப்ரவரி 2ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (20635) வருகிற 16ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இரவு 8:20 மணிக்கு புறப்படும்.

அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752) வருகிற 15ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16751) வருகிற 16ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இரவு 7:40 மணிக்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.