ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 6, 2026

Spread the love

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம் போல் தனது பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் பயணித்த ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.

விபத்தின் பலத்த மோதலால் கட்டுப்பாட்டை இழந்த அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தப் பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் கட்டுப்பாடற்ற அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கொந்தளிப்புடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

https://twitter.com/ndtv/status/2118470917307183232/video/1

   

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த எடக்காடு காவல்துறையினர் உடனடியாக இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பி. சரசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து தொடர்பாக வழக்கப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.