ஐயோ… என்ன கொடுமை இது… திருமணமாகி 2 மாதங்களில் புதுமணப் பெண்… பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி… மலக்பேட்டில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் விபத்து…!

By Swetha on ஐப்பசி 11, 2026

Spread the love

மலக்பேட் டி-மார்ட் எக்ஸ் சாலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி திருமணம் நடந்த லாவண்யா என்ற புதுமணப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தனது கணவர் ஸ்ரீகாந்துடன் சரோூர்நகரில் வசித்து வந்தார், திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

லாவண்யா இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் திடீரென சறுக்கி விபத்துக்குள்ளானதில், அவர் நிலைதடுமாறி எதிரே வந்த அரசுப் பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.

   

https://twitter.com/sudhakarudumula/status/2108915831312933041/video/2

   

இந்த விபத்துச் சம்பவம் சதர்ஹாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.