தூங்கிக்கொண்டிருந்த 2 மாத குழந்தையின் மீது இடிந்து விழுந்த கூரை… அரசு மருத்துவமனையில் நேர்ந்த பதறவைக்கும் சம்பவம்… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கம்லாராஜா அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பிரிவின் கூரையில் இருந்து காரை (பிளாஸ்டர்) பெயர்ந்து விழுந்ததில் இரண்டுரை மாத பெண் குழந்தை காயமடைந்துள்ளது. வார்டு எண் 3-இல் தாய் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குஷி என்ற அந்தக் குழந்தையின் காலில் காரைத் துண்டுகள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அந்த வார்டில் இருந்த 16 குழந்தைகள் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பாதுகாப்பான வேறு வார்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தைப் படம் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட நீர் கசிவே கூரையின் காரை பலவீனமடைந்து கீழே விழுந்ததற்குக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் சந்தேகிக்கிறது. இருப்பினும், அதே வார்டில் கடந்த வாரமும் இதேபோன்று காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனை கட்டிடத்தின் பராமரிப்பு நிலை குறித்தும், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

43 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

45 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

51 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

60 minutes ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

2 மணத்தியாலங்கள் ago