“அப்பா நான் விளையாட போறேன்”… ஆசை ஆசையாய் கிரிக்கெட் விளையாடச் சென்றவர் பிணமாக திரும்பிய சோகம்… தண்ணீர் குடித்த போது நடந்த துயரம்…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி நகர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திர அஹிர்வார்(30) என்ற நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு lic யில் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உள்ள இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். நேற்று காலை அரசு கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். விளையாடும்போது அசோகரியத்தை உணர்ந்த அவர் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலையில் எழுந்து, அப்பா நான் விளையாட போறேன் என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாக சென்றுள்ளார். பிறகு சற்று நேரத்திலேயே அவருடைய இறப்புச் செய்தி குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை தான் தந்தது.