கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தருண், புவன் மற்றும் லிகித் ஆகிய 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தனர். பெற்றோர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து அங்குள்ள சிக்ககெரே ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
ஏரியில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால், மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து ஏரியில் தேடுதல் வேட்டை நடத்தி மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக புறநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை…
டெல்லி புடாரி பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விசித்திரமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் பிரபல யூடியூபர் துருவ் ரதி மற்றும் நடிகர் பிரகாஷ்…
ஃபிரோசாபாத்தின் டி.ஏ.வி மார்க்கெட் பகுதியில், திருமண முறிவு வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் தனித்து வாழ்ந்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட…
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், காதலனைச் சந்திக்கச் சென்று காணாமல்போன 17 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட…