மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், “பிரவுன்கர்ல் சாம்” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அறியப்படும் பெண் பைக்கர் ஒருவர் கடுமையான போக்குவரத்து நெரிசலில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், அவரும் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில், அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தின் மிக அருகில் வந்து, அந்தப் பெண்ணின் காலின் மீது காரின் டயரை ஏற்றியுள்ளது.
https://www.instagram.com/reel/DeEzqpjsvpL/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
வலியால் அலறிய அந்தப் பெண், காரின் கதவைத் தட்டி காரை பின்னால் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், கார் ஓட்டுநர் காரைப் பின்னால் எடுப்பதற்குப் பதிலாக மேலும் முன்னால் இயக்கியதால் அவரது காலில் மேலும் காயம் ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பின் அந்தப் பெண் காரை ஓரங்கட்டுமாறு கூறியபோதும், காரில் இருந்த தம்பதியினர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. ஹெல்மெட் கேமராவில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பற்ற கார் ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதியவரான 84 வயது கேப்ரியல் கூட்டின்ஹோவை அவரது சொந்த மகனே கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமீபத்தில் வெளியாகி பெரும்…
ஓவியம் மற்றும் ஆடை வடிவமைப்பில் பல விருதுகளை வென்ற சரண்யா என்ற பெண், தனது கணவர் மஞ்சுநாத்துடன் ஏற்பட்ட குடும்பத்…
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே ‘இருமொழிக் கொள்கை’ என்பது மாநிலத்தின் மொழி உரிமை சார்ந்த அடிப்படை அடையாளமாகவும், மாநில இறையாண்மையின்…
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடைகளற்ற ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும்…
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மிக தீவிரமான களம் கண்டு முடிந்துள்ளது. மதுராந்தகத்தில் 85…