அசாமில் நடந்த கொடூரம்…. பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்…. இறுதியில் போலீஸ் அதிரடி….!

By SATHISH R on ஆடி 13, 2026

Spread the love

அசாம் மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பானிபூரி வியாபாரியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ரியான் என்பவர், அசாமின் சிவசாஹர் பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்துள்ளார். இதற்காக அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த தம்பதியருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் தினமும் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வியாபாரி, வீட்டில் சிறுமி தனியாக இருந்த நேரத்தில் அத்துமீறி நுழைந்து கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அச்சிறுமிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லைகளையும் கொடுத்து வந்துள்ளார்.இந்த தொடர் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள், உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பற்றி பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். பானிபூரி வியாபாரி ரியான் செய்த இந்த விபரீதச் செயலைக் கேட்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்து போயினர்.இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து உடனடியாகப் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குற்றவாளி ரியானை விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், பாதுகாப்பற்ற சூழலில் சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடூரம் அசாம் மாநிலம் முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.