சோறு வடித்த கஞ்சியில் விழுந்த பிஞ்சு குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சென்னையில் பெரும் சோகம்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியில் தற்காலிக டெண்ட் அமைத்து, பூம்பூம் மாடு மேய்த்து தொழில் செய்துவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வல்லாள வெங்கடேஸ்வரலு என்பவரின் 4 வயது பெண் குழந்தை அவந்திகா, சோகமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தீபாவளித் திருநாளின் போது குழந்தை ஆசையோடு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாக சோறு வடித்த சூடான கஞ்சியில் தவறி விழுந்து அலறியுள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், உடனடியாக அவந்திகாவை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பண்டிகை காலத்தில் நேரிட்ட இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.