FLASH NEWS: அதிகாலையில் பேராபத்து… துர்கா சிலையுடன் சென்ற பக்தர்கள் மீது புகுந்த வேன் – 7 பேர் பலி…. சோக சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி அருகே, வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது அதிகாலை வேளையில் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாகப் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புல்டானாவில் உள்ள புகழ்பெற்ற ஷேகான் பகுதியில் இருந்து துர்கா தேவி சிலையுடன் பக்திப் பரவசத்துடன் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது நேரிட்ட இந்தத் துயரச் சம்பவத்தில், மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறைவனைத் தரிசித்துவிட்டுத் திரும்பிய புனித யாத்திரை, கணப்பொழுதில் சோகத்தில் முடிந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.