உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டாவில், ராங் சைடில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலிஸாரின் பைக் மீது கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டதில், போக்குவரத்து போலிஸ் அதிகாரி உடலெங்கும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
காரை ஓட்டி வந்த பெண், போக்குவரத்து விதிகளைப் சிறிதும் மதிக்காமல், தவறான பாதையில் அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், விபத்தை ஏற்படுத்திய பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறி மற்றவர்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
