போரால் ஸ்தம்பித்த மார்க்கெட்…! தங்கம் விலையை அதிரடியாக குறைத்த வியாபாரிகள்… பின்னணி என்ன…?

By Devi Ramu on பங்குனி 7, 2026

Spread the love

ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க நிலைகளை இலக்கு வைத்து ஈரான் ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் விளைவாக, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மளமளவென உயர்ந்துள்ளது. மேலும், போர் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வழிப் பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால், பெரும் பொருளாதார நெருக்கடியும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலால் துபாயில் இருந்து ஆசிய நாடுகளுக்குச் செல்லும் தங்க ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சந்தையில் தங்கம் தேக்கமடைந்துள்ளது. வர்த்தகர்கள் தங்களின் நிதி இழப்பைக் குறைக்கவும், இருப்பைக் கரைக்கவும் தங்கத்தின் விலையில் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். அவுன்ஸ் ஒன்றுக்குச் சுமார் 30 டாலர்கள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தை விலையை விட துபாயில் தங்கம் மலிவாகக் கிடைக்கிறது.