திமுகவுக்கு விழுந்த பலத்த அடி… சற்றுமுன் கட்சியிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

By Nanthini on சித்திரை 6, 2026

Spread the love

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்த டி.ஆர். சண்முகசுந்தரம் (TRS), வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்காததால் கடும் அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறினார். முதலில் திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்வதாகத் திட்டமிட்டிருந்த அவர், திடீரென இன்று தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய தொண்டர்களுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இந்த எதிர்பாராத நகர்வு மேட்டுப்பாளையம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக தொண்டர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.

1

   

தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக அறிவித்துள்ள டி.ஆர்.எஸ், “கட்சி தனக்கு வாய்ப்பு மறுத்திருந்தாலும், மக்கள் பணியாற்றுவதில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் தொகுதியில் வலுவான மக்கள் செல்வாக்கு கொண்ட அவர் சுயேட்சையாகக் களம் இறங்குவது, திமுக கூட்டணி வேட்பாளருக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தொகுதியின் தேர்தல் களம் தற்போது மும்முனைப் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளதால், இந்த அதிரடி மாற்றம் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.