அடப்பாவிகளா… இப்படியா அடிப்பீங்க…? கார் பார்க்கிங் ஊழியரின் உடையை கிழித்து கல்லை தூக்கி போட்ட சுற்றுலா பயணிகள்…. பொது இடத்தில் நடந்த கொடூரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள முனிகி ரெட்டி பகுதியில், பொது இடத்தில் மது அருந்திவிட்டு வாகன நிறுத்துமிட ஊழியரைத் தாக்கியதுடன், உள்ளூர் மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட டெல்லியைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகளைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு தங்களின் ‘மஹிந்திரா தார்’ வாகனத்தில் வந்த இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், பொதுவெளியில் மது அருந்தியதை அங்கிருந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர்கள், வாகன நிறுத்துமிட ஊழியரின் ஆடைகளைக் கிழித்து உதைத்ததோடு, பெரிய கல்லைத் தூக்கித் தாக்க முயன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

தப்பியோட முயன்ற அந்தப் பயணிகளைச் சுற்றியிருந்த பொதுமக்களே தடுத்து நிறுத்தி, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துப் பிடித்துக் கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெல்லியின் புராரி பகுதியைச் சேர்ந்த துஷார் மிஸ்ரா, மனிஷ் சிங், ஆஷிஷ், விக்கி மற்றும் அவரது தோழி காஜல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது சொகுசு வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புனிதத் தலமான ரிஷிகேஷில் இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என இணையத்தில் பலரும் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

9 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

9 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

9 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

9 மணத்தியாலங்கள் ago