ஹைதராபாத்தில் பரபரப்பான பொதுச் சாலையில் தனது 6 வயது பேத்தியை கார் ஓட்ட அனுமதித்த காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் புஜாரி திருப்பதி என்பவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஜூலை 11 அன்று இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், சிறுமி காரின் ஸ்டீயரிங்கை பிடித்துக்கொண்டு மிக மெதுவாக காரை ஓட்டிச் செல்வதும், அருகில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் அவருக்கு வழிகாட்டுவதும் பதிவாகியுள்ளது. கார் மிகவும் மெதுவாகச் சென்றதால் அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரை வழிமறித்து அந்த அதிகாரியிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் “இது என் இஷ்டம், கேட்க நீங்கள் யார்?” என்று அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது பேத்தியை மிகக் குறைந்த வயதில் கார் ஓட்டியதற்கான ‘கின்னஸ் சாதனை’ படைக்க வைக்கவே இவ்வாறு பயிற்சி அளித்ததாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டது மற்றும் மைனர் சிறுமியை வாகனம் ஓட்ட அனுமதித்தது போன்ற குற்றங்களுக்காக, அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 125 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…