“கன்னியாகுமரி டூ சென்னை வரை ‘டோட்டல் ஃப்ரீ’!.. முதல்வர் விஜய் போடப்போகும் அந்த மெகா கையெழுத்து?. பெண்கள் மகா குஷி.. வெளியான மாஸ் அப்டேட்”..!!

By Muthu Mani on ஆனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்ற பெயரில் வழங்கப்பட்ட ரூ.1,000, த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என்ற பெயரில் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. தகுதியில்லாதவர்கள் மற்றும் அதிக சொத்து மதிப்புடையவர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் பயனாளிகள் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தகுதியான ஏழை எளிய பெண்களுக்கு இந்தத் தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வரவுள்ள மற்றொரு மெகா அறிவிப்பு, பெண்களுக்கான “வெற்றி பயணம்” பேருந்து திட்டமாகும். தற்போதைய நடைமுறைப்படி சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் (White Board) மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடியும் என்பதால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதற்குத் தீர்வாக, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் (All Government Buses) மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணத்தை நீட்டிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், பெண்களின் மாதாந்திரப் பயணச் செலவு பெருமளவு குறைந்து அவர்களின் பொருளாதாரச் சுதந்திரம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

த.வெ.க. அரசின் இத்தகைய திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் தாமதமாவது குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டித் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையவுள்ள இக்கூட்டத்தில், மகளிர் நலத்திட்டங்கள் மட்டுமன்றி மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை, புதிய தொழில் முதலீடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். பொதுமக்கள், குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.