Categories: சினிமா

விஜய் டிவியை உள்ளே நுழைய விடாமல் தடுத்த சன் டிவி…. TRB-யில் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா..??

Spread the love

2024 ஆம் வருடத்தின் 42 வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை எந்த சீரியல் பிடித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம். இந்த பட்டியலில் ஒரு இடத்தில் கூட விஜய் டிவி சீரியல்கள் எதுவுமே இல்லை என்பது தான் ஹைலைட்.

#image_title

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் கயல் . இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தந்தையை இழந்து வாடும் குடும்பத்தினுடைய மொத்த பொறுப்பையும் தூக்கி சுமக்கும் மகள் கயல் செய்யும் செயல்களுக்கு பல்வேறு தடைகள் வருகிறது. அவருடைய திருமணத்தை நிறுத்துவதற்கும் நெருங்கிய சொந்தங்கள் கங்கணம் கட்டி அலைகிறார்கள். அதையெல்லாம் சமாளித்து பிரச்சினைகளை கயல் எப்படி மூறியடிக்கிறார் என்பது தான் கதை. கடந்த வாரம் போலவே இந்த சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் 11.08 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

#image_title

அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 9.78 புள்ளிகளை பெற்று TRBயில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயின் தன்னுடைய திருமண நாளில் சடார் என்று கல்யாணத்தை நிறுத்திவிட்டு தான் நேசித்த கிராமத்து பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டார் .அடுத்தடுத்து டுவிஸ்ட் தரும் மூன்று முடிச்சு சீரியல் கதையை ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

#image_title

மூன்றாவது டிஆர்பி ரேட்டிங்கில் 9.17 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது சிங்க பெண்ணே சீரியல். சன் தொலைக்காட்சியின் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. கிராமத்தின் மகிழ்ச்சியாக இருந்த இளம்பெண் ஆனந்தி குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக சென்னையை வருகிறார். சென்னைக்கு வந்த ஒரு பெண்ணின் கதை என்னவாகிறது என்பதுதான் இந்த சீரியலின் கதை.

#image_title

அடுத்ததாக 8.97 புள்ளிகள் பெற்று  டிஆர்பியில் நான்காவது இடத்தை பிடித்த மருமகள் சீரியல் சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக கேப்ரியல்லா ஆதிரை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் பிரபு. ஆனால் ஒரு பக்கம் கல்யாண செலவை நினைத்து பயத்திலும் உள்ளார். எல்லாவற்றிற்கும் கணக்கு பார்க்கும் இவர் திருமணத்திலும் அதையே செய்கிறார். இதனால் வரும் பிரச்சினைகளை மேற்கொள்கிறார்.

#image_title

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் டிஆர்பியில் 8 .75 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியராக இருக்கும் சுந்தரி ஆதரவற்ற சிறுமிகளுக்கு மாற்றாந்தாயாக இருந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்வது சீரியல் கதை.

Soundarya

Recent Posts

‘அதிமுகவை தொட்டால் நீ காலி”… வரி ஏய்ப்பு செய்யும் விஜய் ஊழலை பற்றி பேசலாமா?… பனையூர் பண்ணையாரை கிழித்து தொங்கவிட்ட ஜெயக்குமார்…..!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில்…

3 minutes ago

கொடூரத்தின் உச்சம்… பெற்ற மகனை பெட்டிக்குள் போட்டு அடைத்த தந்தை.. வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!

உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து,…

10 minutes ago

“வண்டி இல்ல.. பெட்ரோல் இல்ல”.. விஜய்யை பங்கமாக கலாய்த்த அண்ணாமலை… பரபரக்கும் அரசியல் களம்….!

தமிழக அரசியலில் 'என்ஜின்' குறித்த விவாதம் தற்போது அண்ணாமலை மற்றும் விஜய் இடையேயான வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக்…

21 minutes ago

2026-ல் விஜய்யின் ஓட்டு வங்கி எவ்வளவு?… டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்…. கலக்கத்தில் திராவிடக் கட்சிகள்….!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்  ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பாஜகவின்  டெல்லி தலைமைக்கு…

26 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்… ராகுல் எடுத்த திடீர் முடிவு…. தமிழக அரசியலை மாற்றியமைக்கும் ‘விட்டமின் எம்’….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டணி…

31 minutes ago

“இனி TVK -ல தான் எனக்கு வேலை”.. விஜய்யின் கட்சிக்காக வேலையை தூக்கி வீசிய தொண்டர்… வைரலாகும் ராஜினாமா கடிதம்..!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்…

37 minutes ago