“ஆல் ஏரியாவுல ஐயா கில்லி தான்”.. 100 கோடி வசூல் செய்த நடிகர் தனுஷின் படங்கள்… இதோ முழு லிஸ்ட்..!

By Nanthini on ஆனி 25, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான குபேரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இட்லி கடை திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இப்படியான நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருச்சிற்றம்பலம் விமர்சனம்: தனுஷ், நித்யா மேனன் மற்றும் பாரதிராஜாவின்  நடிப்பு, இந்த எளிய, உணர்வுப்பூர்வமான திரைப்படத்தில் உள்ள ...

   

திருச்சிற்றம்பலம்:

   

தனுஷ் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜவஹர் எழுதியிருந்த இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் தனுசுடன் நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றது. இந்த படம் உலக அளவில் 101 கோடி வசூலித்திருந்தது.

 

வாத்தி: திரை விமர்சனம் | vaathi movie review - hindutamil.in

வாத்தி:

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாத்தி. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி மற்றும் சாய் சௌஜண்யா இணைந்து தயாரித்திருந்த நிலையில் ஜிபி பிரகாஷ் இசையமைத்திருந்தார். அதிரடி திரில்லர் கதையில் இந்த சமூகத்திற்கு பலவிதமான கருத்துக்களை எடுத்துக் கூறிய இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.

 

 

Dhanush Speech At Raayan Audio Launch | ராயன் தனுஷ்

ராயன்:

தனுஷ் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ராயன். தனுஷ் இயக்கி நடித்திருந்த இந்த படத்தை கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் தனுசு உடன் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் எந்த திரைப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

4 நாளில் ரூ.100 கோடியை அள்ளிய "குபேரா"- "Kubera" crossed Rs. 100 crore in 4  days

குபேரா:

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் குபேரா: தனுஷ் நடித்த படங்களில் 100 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்டில் நான்காவதாக இணைந்துள்ள திரைப்படம் தான் குபேரா. இப்படத்தில் தனுஷ் உடன் நாகர்ஜுனா,ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் தமிழை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.